வாக்குச்சாவடிகளை குளறுபடி இல்லாமல் பிரிக்க வேண்டும்

திருப்பூர், பிப்.5: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. சமூக இடைவெளி கடைப்பிடித்து, தமிழக சட்டசபை தேர்தலை நடத்த வசதியாக, திருப்பூர் மாவட்டத்தில், கூடுதலாக 993 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவை, சமூக இடைவெளியுடன் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. ஆயிரம் வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி பிரிக்கப்படுகிறது. சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி பிரிக்கும் பணி குறித்து, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். அதன்படி, மாவட்ட அளவிலான, அனைத்துக்கட்சி கூட்டம் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும், அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி பிரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.அரசியல் கட்சி பிரதிநிதிகள், துணை வாக்குச்சாவடி அந்தந்த பள்ளியிலேயே, அடுத்த அறையிலேயே அமைய வேண்டும். இல்லாவிட்டால், குடும்பத்தில் உள்ள வாக்காளர், வெவ்வேறு இடங்களுக்கு வாக்களிக்க செல்ல வேண்டிய நிலை உருவாகும். துணை பட்டியல் தயாரிக்கும் போதும், துணை வாக்குசாவடி அமைக்கும் போதும் முடிந்தவரை ஒரே பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்த அறைகளை வாக்குச்சாவடிகளாக அமைக்க வேண்டும், குளறுபடி இல்லாமல் வாக்குச்சாவடிகளை பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

Related Stories:

>