×

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

ஊட்டி,பிப். 5:ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கொலா, இத்தலார் ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலக்கொலா, இத்தலார் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சாரபில் ரூ.52 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட மாசிகண்டி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படும் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது.  கேர்கண்டி பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.27 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.20.74 லட்சம் மதிப்பில் உமர்கண்டி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. அதே ஊராட்சியில் மூலதனமானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.20.33 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட புதுஹட்டி கிராம சாலை பணியினையும் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் சுஜாதா, உதவி பொறியாளர் வித்யா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுலவலர் ஜனார்த்தன், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  தரன் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...