ஈரோடு, பிப்.20: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது,கஞ்சா,குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், சட்ட விரோதமாக மது விற்ற, ஈரோடு அடுத்த சீனாபுரத்தை சேர்ந்த துரைசாமி (52), கோபி அடுத்த நாகர்பாளையத்தை சேர்ந்த ஜெய்பிரசாத் (41), ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பங்களாபுதூரை அடுத்த துரையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற,ஏரங்காட்டூரை சேர்ந்த ஸ்ரீதரை (21), கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மளிகை கடையில் குட்கா விற்ற, பெருந்துறை அடுத்த கே.எஸ்.பாளையத்தை சேர்ந்த துளசிமணி (73), கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த சுதீப் நாயக் (25), பவானிசாகர் அடுத்த பழையதோட்டத்தை சேர்ந்த சுப்பையன் (76), ஆகியோரை கைது செய்த போலீசார், 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
