- மாசி மகா பிரம்மோத்சவம்
- கங்கைகொண்ட சோழபுரம் பிரிஹதீஸ்வரர் கோயில்
- Jayankondam
- கங்கைகொண்டா
- சோழபுரம்
- பிரகதீஸ்வரர்
- கோவில்
- யுனெஸ்கோ
- அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம், பிப்.20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் 10ம் ஆண்டு மாசி மக திருவிழா நாளை (பிப்.21ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோயில் வளாகத்தில் உள்ள 40 அடி உயரமுள்ள கொடிமரத்துக்கு மஞ்சள்,சந்தனம் உள் ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பித்து விழா துவங்குகிறது.
முன்னதாக இன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 27ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 1ம் தேதி (ஒன்பதாம் திருநாள்) காலை 7.30 மணிக்கு திருத்தேர் பவனியும், சுவாமி கோவிலுக்கு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
வருகிற மார்ச் 2ம் தேதி (பத்தாம் திருநாள்) தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் மேலும் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜையும், மாலை சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. பிரகதீஸ்வரர் வழிபாட்டு குழுமம் சார்பில் அம்பாள் உத்சவம், சண்டிகேஸ்வரர் உத்சவம், பிரமோற்சவம் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
