×

போலி எம்.சாண்ட் விற்பனையால் பாதிப்பு

கோவை பிப்.5: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ் ஆகியோர் தமிழக பொதுப்பணித்துறை நிர்வாகம், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியதாவது: கோவையில் கட்டிடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான போலியான, தரமற்ற எம்.சாண்ட் விற்பனை அதிகமாகி வருகிறது. கிரசர் பவுடரில் எம்.சாண்ட் கலப்பது பரவலாகிவிட்டது. இரண்டு யூனிட் எம்.சாண்ட், இரண்டு யூனிட் குவாரி டஸ்ட் பவுடர் கலந்து எம்.சாண்ட் என விற்பனை செய்கிறார்கள். எம்.சாண்ட் என வெளித்தோற்றத்திற்கு காட்டும் வகையில் தண்ணீர் கலப்பதும் நடக்கிறது. ஜா மற்றும் கோன் கிரசரில் தயாரிக்கப்படும் தரமற்ற எம்.சாண்டை வி.எஸ்.ஐ இயந்திரத்தில் தயாரிக்கும் தரமான எம்.சாண்ட் போல் காட்டுகிறார்கள்.

மசனை மற்றும் கிராவல் மண்ணை அரைத்து அதை எம்.சாண்ட் வாசரில் கழுவி வெள்ளை எம்.சாண்ட் எனவும் விற்கிறார்கள். இந்த வகையான எம்.சாண்ட் பயன்படுத்துவது கட்டிடங்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
பொதுப்பணித்துறையின் தர பரிசோதனை சான்று, வி.எஸ்.ஐ. அப்ரூவல் சான்று பெற்று தரமாக தயாரிக்கப்படும் எம். சாண்ட் மட்டுமே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். பொதுப்பணித்துறையிடம் இந்த வகையான தரச்சான்று பெற்ற உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் தரமான எம்.சாண்ட் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். இதர போலியான எம்.சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி எம்.சாண்ட் பறிமுதல் செய்யது உபயோகக தடை விதிக்கவேண்டும். மக்களை ஏமாற்றி குவாரி பவுடர்களை எம்.சாண்ட் என விற்பனை செய்ய விடக்கூடாது. போலி எம்.சாண்ட் ஆதிக்கம் அதிகமானால் பல லட்ச ரூபாய் செலவு செய்து கடன் வாங்கி வீடு கட்டும் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். போலி எம்.சாண்ட் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் சில மாதங்களில் விரிசல் விட்டு பழுதாகிவிடும். போலியான எம்.சாண்ட், பி.சாண்ட் தயாரிக்கும் கிரஷர் மற்றும் குவாரி யூனிட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Tags :
× RELATED பயணிகள் கூட்டத்தில் புகுந்த பேருந்து