திங்கள்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்

ஈரோடு, பிப்.5: ஈரோடு மாவட்டத்தில் இனி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. தமிழக முதல்வர் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளார்.அதன்பேரில், கலெக்டர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரிடையாக வழங்கலாம். மேலும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பொதுமக்களும் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் கூட்டத்திற்கு வருவதை தவிர்த்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>