கறம்பக்குடி அருகே பைக் மோதி விவசாயி பலி

கறம்பக்குடி, பிப். 5: கறம்பக்குடி அருகே பைக் மோதி விவசாயி பலியானார். படுகாயமடைந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகப்பன் (65). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து மழையூருக்கு நடந்து சென்றார். அப்போது மழையூர் அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தை சேர்ந்த ரகுநாதன் (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முருகப்பன் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு முருகப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பைக்கில் வந்த ரகுநாதன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கறம்பக்குடி போலீசில் முருகப்பனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், மழையூர் எஸ்ஐ துர்காதேவி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>