×

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி 3வது நாளாக மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் 59 பேர் கைது

புதுக்கோட்டை, பிப்.5: புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் 3வது நாளாக நடத்திய மறியல் போராட்டத்தில் 59 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம்தேதி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் குமரேசன், ரெங்கசாமி, குணசேகரன், பழனிச்சாமி, பத்மாவதி, கருப்பையா உள்ளிட்ட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : servants ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...