×

தஞ்சையில் 10ம் தேதி நடக்கிறது நவீன அரிசி ஆலை ஊழியர்களுக்கான 6வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்

தஞ்சை,பிப்.5: நவீன அரிசி ஆலை ஊழியர்களுக்கான 6வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சையில் தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிதம்பரசாமி தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர்கள் கணேசன், ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்று, அறிக்கையினை சமர்ப்பித்தார். பாரதிய மஸ்துார் சங்கத்தின் தமிழ் மாநில பொது செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், பணியாளர்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டியவிடுப்பு ஒப்பளிப்பு மற்றும் பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை நிரப்ப வேண்டும். நவீன அரசி ஆலை ஊழியர்களுக்கான 6வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்,
போர்மேன் பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். நிர்வாக மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கும் கடந்த காலங்களில் சமமான ஊதியம் வழங்கப்பட்டு வந்ததை போல் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நெல்கொள்முதல் பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். அரிசி ஆலை ஊழியர்களுக்கு அலவன்ஸ் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதம் ரூ.6,500 மற்றும் டிஏ வழங்க வேண்டும். சுமைதுாக்கும் தொழிலாளர்களுக்கு ஏற்றுக்கூலி மற்றும் எடை கூல் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : 6th Pay Commission ,Modern Rice Mill Employees ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...