×

ராயபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வைக்கோலில் யூரியா செறிவூட்டல் பயிற்சி

நீடாமங்கலம், பிப்.5: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ராயபுரம் கிராமத்தில் நிக்ரா திட்டத்தில் விவசாயிகளுக்கு வைக்கோலில் யூரியா செறிவூட்டல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு தலைமை வகித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், தீவன பராமரிப்பே கால்நடையின் முக்கிய அம்சம். அதுவே பால் உற்பத்திக்கும், பசுக்களை எளிதில் சினையாக்குவதற்கும் உரிய வழியாகும் என்றார்.

இப்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சபாபதி பேசுகையில், பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. விவசாயக் கூலிகள் வெறும் வைக்கோல் மட்டும் கால்நடைகளுக்கு உணவாக தருகிறார்கள். இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வாக சாதாரண வைக்கோலை யூரியா செறிவூட்டல் மூலம் நல்ல ஊட்டசத்துள்ள உணவாக மாற்றித்தர இயலும். இதனால் பால் உற்பத்தி திறனும் இனப்பெருக்க திறனும் கால்நடைகளில் அதிகரிக்கும் என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் விஜிலா செய்திருந்தார்.

Tags : village ,
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு