×

400 லாரியுடன் டிரைவர்கள் காத்திருப்பு திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய ஆண்டு திருவிழா

திருத்துறைப்பூண்டி, பிப்.5: திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னைஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடி பவனி முக்கிய வீதிகளில் வலம் வந்து ஆலயத்தில் கொடிமரத்தில் வேளாங்கண்ணி தியான இல்ல இயக்குனர் அருட்தந்தை செபஸ்டின் புனிதம் செய்தார். பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ திருக்கொடி ஏற்றி வைத்தார். இதில்உதவி பங்கு தந்தை தாமஸ் அடிகளார், அருட்தந்தை ரீகன் ஜெயக்குமார், பங்கு மன்ற உறுப்பினர்கள், கிராம தலைவர்கள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர். வரும் 10ம் தேதி திருவிழா கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்ற பின்னர் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. 11ம் தேதி திருக்கொடி இறக்கப்படுக்கிறது.

3 முறை மத்திய அரசு விருதை பெற்றுள்ளோம் , இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரான தேன்மொழி கூறுகையில், ஏற்கனவே 3 முறை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பயர் விருதை பெற்றுள்ளோம். தற்போது இந்த விருதை தமிழக அரசு எங்கள் பள்ளிக்கு வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் குழுவாக இணைந்து ஒன்றுமையாக செயல்படுவதால் இது சாத்தியமாகியுள்ளது என்றார்.

Tags : Drivers ,Thiruthuraipoondi St. Lourdes Mother Temple Annual Festival ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...