நர்ஸிடம் தாலி செயின் பறிப்பு

திருச்சி, பிப். 5:திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தன்ராஜ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (55). இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியில் உள்ளார்.இதில் நேற்று பணி முடிந்து பஸ்சில் ஏறிஇரவு 7 மணியளவில் சண்முகா நகர் பஸ் நிறுத்தம் வந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் மல்லிகா கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>