வீரமணி பார்வையிட்டார் தொட்டியத்தில் டூவீலர் திருட்டு: வாலிபர் கைது

தொட்டியம், பிப், 5: தொட்டியம் பகுதியில் வாகனங்கள் திருட்டு போன நிலையில்இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் உத்தரவின்பேரில் எஸ்ஐ குமார், போலீசார் லோகநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தொட்டியம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து தொட்டியம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தொடர்ந்து இரு சக்கர வாகனம் திருடியதும்,சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தசரவணன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்து மேலும் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.

Related Stories:

>