×

திருச்சி மன்னார்புரம் அருகே சாலை மேம்பால திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்

சென்னை, பிப். 5: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்றுமுன்தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விடுத்த கோரிக்கை: மன்னார்புரம் அருகே திருச்சி 4 லேன் சாலை மேம்பால திட்டம் 2011ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் நுழையாமல் திருப்பி விடுவதற்கு சாலை மேம்பால திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதன் முதல்கட்ட பணி 2018ம் ஆண்டில் நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இருப்பினும், மத்திய பாதுகாப்பு துறையின் 0.66 ஏக்கர் நிலம் மாற்றம் செய்து தருவதில் தாமதம் ஏற்பட்டதால், மிக முக்கியமான சென்னை செல்லும் சாலையின் ஒரு இணைப்பு பகுதி முழுமை அடையாமல் இருந்து வந்தது.இதனால் 2ம் கட்டம் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறையின் நிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் நிலம் மாற்று நிலமாக தமிழக அரசு கண்டறிந்துள்ளது. அதை மத்திய பாதுகாப்பு துறைக்கு மாற்றுவதற்கு தடையின்மை சான்றிதழ் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டம் திருச்சி மாநகரின் நீண்டகாலம் நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு திட்டமாகும். எனவே, இக்குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவைப்படும் மத்திய பாதுகாப்பு துறையின் நிலத்தை விரைவாக மாற்றம் செய்து தருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிலுவையில் உள்ள மேம்பால திட்டத்தை மீண்டும் தொடங்கி முடிக்க அனுமதி வழங்கும்படி வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

Tags : Trichy Mannarpuram ,
× RELATED திருச்சி மன்னார்புரத்தில்...