×

கொரோனாவால் நிறுத்தப்பட்ட வருவாய்துறை சிறப்பு முகாம் 11 தாலுகாவில் இன்று நடக்கிறது

திருச்சி, பிப்.5: திருச்சி மாவட்டத்தில் இன்று வருவாய்துறை திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மா திட்டத்தின்படி வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டாமாறுதல், நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரானா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த முகாம் இன்று நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி (கிழக்கு) தாலுகாவில் உக்கடை அரியமங்கலம், திருச்சி மேற்கில் பிராட்டியூர் (கிழக்கு), திருவெறும்பூரில் பழங்கனாங்குடி, ரங்கம் பெட்டவாய்த்தலை, மணப்பாறை மூக்குரெட்டியப்பட்டி, மருங்காபுரி வெள்ளையக்கோன்பட்டி, லால்குடி சிறுமயங்குடி (கி), மண்ணச்சநல்லூர் திருவெள்ளரை, முசிறி பிள்ளாபாளையம், துறையூர் கோட்டப்பாளையம்(கி), தொட்டியம் வாள்வேல்புதூர் ஆகிய கிராமங்களில் தாசில்தார் முதலான வருவாய்த்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று உடனடியாக தீர்வு காண்பர். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Revenue Special Camp ,Corona ,talukas ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...