9 மாதங்களில் 3% குறியீட்டை பிடித்து சாதனை திருப்பைஞ்சீலி கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்டநெரிசலில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை பறிப்பு

மண்ணச்சநல்லூர்,பிப்.5: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது அத்திவிநாயகர் கோயில். இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் மொத்தம் 14 பவுன் நகைகள் திருடப்பட்டதாக புகார்.எழுந்துள்ளது.

திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்த விமலா (60) என்பவரிடம் 4 பவுன், ஆரியமாலா (65) என்பவரிடம் 3 பவுன், ராணி (55) என்பவரிடம் 7 பவுன் நகைகள் பறிக்கப்பட்டதாக மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ள்ளனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More