×

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசு பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து முழுமையாக பராமரிக்கப்பட்ட புதிய வேகன், கோச்சுகள் அனுப்பி வைப்பு

திருச்சி, பிப்.5: தெற்கு ரயில்வே வரலாற்றிலேயே முதல் முறையாக பொன்மலை ரயில்வே பணிமனையில் சேலம் மண்டலத்தின் எல்எச்பி பவர் கார்-ன் முழுமையான பராமரிப்பை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது. இரண்டு டீசல் ஜெனரேட்டர்களும் ஓஇஎம் உதவியுடன் பராமரிப்பு பணி நிறைவேற்றப் பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் 134 எல்எச்பி பவர் கார்-களை பராமரிக்கும் பணி ஆணையை இந்த பணிமனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2020-21ம் நிதியாண்டில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இக்கட்டானசூழ்நிலையிலும் இந்த பணிமனை 17 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒன்பது மாதங்களுக்குள் 3 சதவீத குறியீட்டை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளது.

தற்போது 300-வது மற்றும் 301-வது வேகன்கள் கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2003-04ம் ஆண்டில் 322 வேகன்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட இலக்கு மிக விரைவில் எட்டப்படும் நிலையில் உள்ளது. வேகன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக பல புதிய உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக உற்பத்தி நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த புதிய உத்திகளின் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மேலும் இந்த பணிமனை, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் சிறப்பு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட நான்கு கோச்சுகளில் இறுதி கோச் நேற்று வெற்றிகரமாக வழியனுப்பி வைக்கப்பட்டது.மேலே குறிப்பிடப்பட்ட பவர் கார், வேகன்-கள் மற்றும் கோச்-ஐ தெற்கு ரயில்வேயின்முதன்மை இயந்திரவியல் பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் பொன்மலை பணிமனையில் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இதில் பொன்மலை தலைமை பணிமனை மேலாளர் சியாமதார் ராம் முன்னிலை வகித்தார். அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.முன்னதாக வெங்கடசுப்பிரமணியன் பணிமனையின் மேற்கு வாயில் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள, மேற்கு ரயில்வேயின் குறுகிய ரயில்பாதை ஹெரிடேஜ் கோச்-ஐ திறந்து வைத்தார். மேலும் அவர், ஐஓடிஅடிப்படையிலான மின் ஆற்றல் கண்காணிப்பு அமைப்பையும் திறந்து வைத்தார். இந்த ஆய்வின் இறுதியில் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சியாமதார்ராம் தலைமையில்200 பூர்வீக வகை மரக்கன்றுகளை மியாவாக்கி முறைத்தோட்டம் அமைக்கும் விதமாக நட்டனர்.

Tags : coaches ,teams ,Baisu Ponmalai Railway Workshop ,
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு