×

மேட்டுப்பாளையத்தில் கைப்பந்து போட்டி

தா.பேட்டை, பிப்.5: மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வாலிபால் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பல்வேறு அணிகள் போட்டியிட்டன இதில் முதல் பரிசு தொகை ரூ. 15,021ஐமின்னம்பல்லி அணியும், இரண்டாம் பரிசு தொகையை ரூ. 12,021ஐ திருச்சி ஆயுதபடை போலீஸ் அணியும், மூன்றாம் பரிசு தொகை ரூ-9,021ஐ அல்லூர் அணியும், நான்காம் பரிசு தொகை ரூ-6,021ஐ மேட்டுப்பாளையம் அணியும் பெற்றனர்.சிறப்பு விருந்தினராக தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு தொகைகளை வழங்கினார்.

Tags : Volleyball match ,Mettupalayam ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது