×

ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் வழங்க மறுப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

திருச்செங்கோடு, பிப். 5: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம், சைக்கிள் ஸ்டாண்ட் கழிப்பறைகள் போன்ற 18 இனங்களுக்கு, நகராட்சி சார்பாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்த பள்ளிகளுக்கான விண்ணப்பத்தை நேற்று முன்தினம் மாலை 4மணி வரை வழங்கலாம் என்று நகராட்சி கூறியிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த 3 பேர் விண்ணப்பம் கேட்டு டிடியுடன் காலை 11 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்தனர்.

மாலை 6 மணி வரை காத்திருந்த போதிலும், அதிகாரிகள் வரவில்லை எனக்கூறி, அவர்களுக்கு ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. டிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை பரிசோதனை செய்த போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், அனுமதி சீட்டு வழங்கி உள்ளே அனுப்பி வைத்தனர். அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தியதுடன், நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை  சமாதானப்படுத்திக்கொண்டிருந்த போது, சீனிவாசம்பாளையத்தை சேர்ந்த செந்தில் மற்றும் கட்சியினர், நகராட்சி ஊழியரிடம் இருந்த அனுமதி சீட்டுகளை பறித்து கிழித்து தூக்கி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

இதையடுத்து டிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார், கொமதேகவை சேர்ந்த செந்தில்(48), பொன்னுசாமி (66), கவின்குமார்(38),  வெங்கடாசலம் (45), சிவக்குமார் (50), வாசுதேவன்(44), தமிழ்செல்வன் (50),  ராஜசேகர் (30), முனிராஜ் (37), வெங்கடேஷ் (44),  கார்த்திகேயன்(41),  ஜெயகுமார் (37) உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, வேனில் அழைத்துசென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடைபெற்றது.

Tags : office siege ,auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்