×

ஊத்தங்கரையில் துவக்கப்பள்ளிக்கு விருது

ஊத்தங்கரை, பிப்.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறை சார்பில், சிறந்த பள்ளிகளுக்கான விருதுக்கு 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் கீழ்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கீழ்குப்பம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் வழங்கினார். சிறந்த பள்ளிக்கான விருது பெற பள்ளியின் செயல்பாடுகள், கற்றல் திறன், ஒழுக்கம் மற்றும் பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி பயன்படுத்தும் விதம், மாணவர்களின் நன்னடத்தை ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்பட்டு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வுசெய்யப்பட்ட பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Primary School ,Uttaranchal ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து