×

தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் 2வது முறையாக இடமாற்றம்

தர்மபுரி, பிப்.5: தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் 2வது முறையாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 3ஆண்டுகள் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரத்தினகுமார், கடந்த வாரம் 30ம் தேதி இடமாற்றம் செய்து, அவருக்கு பதிலாக தர்மபுரி நகர இன்ஸ்பெக்டராக, சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பணியாற்றும் பாஸ்கரபாபு நியமிக்கப்பட்டுள்ளார், என சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், அன்று ஒரேநாளில் பணிமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கே நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி தர்மபுரி அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், நூதனமுறையில் நடந்த கொலையை கண்டுபிடித்து 3பேரை நேற்று கைது செய்தார். இந்நிலையில் மீண்டும் பணிமாற்றம் செய்யப்பட்டார். எந்த இடம் என குறிப்பிடாமல் காத்திருப்போர் பட்டியலில் நேற்று மாலை வரை வைக்கப்பட்டிருந்தார். இதனால் தர்மபுரி காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dharmapuri Town Inspector ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா