×

காரிமங்கலம் வணிகர் சங்க தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா

காரிமங்கலம், பிப்.5: காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவரும், நந்தியா எலக்ட்ரிக்கல், நர்மதா ஏஜென்சீஸ் உரிமையாளருமான மாது, மகேஸ்வரி மகள் நந்தியா, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணாமலை அமராவதி மகன் ஆனந்த் ஆகியோரின் திருமணம் தர்மபுரி கோட்டை கோயிலில் நடந்தது. மணமக்களின் திருமண வரவேற்பு விழா காரிமங்கலம் காமாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வணிகர் சங்க நிர்வாகிகள் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, வணிகர் சங்க தலைவர் மாது மகேஸ்வரி, நர்மதா ராகுல் கங்கேஸ் மற்றும் குடும்பத்தினர் பணியாளர்கள் செய்திருந்தனர். ...

Tags : Wedding Reception ,Karimangalam Chamber of Commerce ,President's House ,
× RELATED ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிற...