இரண்டு பசுமாடுகள் திருட்டு

நல்லம்பள்ளி, பிப்.5:  நல்லம்பள்ளி அடுத்த பாளையம் புதூர் 4ரோடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(42).இவர் வளர்த்து வரும் 3பசுமாடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த ேபாது, இரண்டு பசு மாட்டை காணவில்லை. மர்ம நபர்கள் பசுமாட்டை திருடி சென்றது தெரிய வந்தது. தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பெருமாள் கொடுத்த புகாரின் ேபரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>