×

மலை சாலையில் தடுப்பு சுவர்

தர்மபுரி, பிப்.5:தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் இருந்து நாகர்கூடல் கிராமத்துக்கு செல்லும் சாலையில், நாகர்கூடலை அருகே சில கிலோ மீட்டர் முன்னதாக மலைச் சாலையில் பயணிக்க வேண்டும். இந்த மலைச் சாலையில் ஓரிடத்தில் அக்காள், தங்கச்சி மேடு என்ற இடம் உள்ளது.

இந்த இடத்தில் மிகஅதிக இறக்கமாக செல்லும் சாலையில், ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவுப் பகுதியில் சாலையோரம் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கம்பி அமைப்புகள் இல்லாத நிலையில், அடிக்கடி பலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : mountain road ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...