×

வரும் தேர்தலில் ஏனாம் தொகுதி வேட்பாளர் யார்? மல்லாடி ஆதரவாளர்களுடன் ஆலோசனை

புதுச்சேரி, பிப். 5: புதுச்சேரியின் ஒரு பிராந்தியமான ஏனாம் தொகுதியில் தேர்தலில் வீழ்த்த முடியாதவராக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திகழ்கிறார். தொகுதி மக்களால் அன்போடு குரு காரு.. என  அழைக்கப்படுபவர். 1996ம் ஆண்டு முதல் நடந்த தேர்தலில் தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக  தேர்வு செய்யப்பட்டு வருகிறார். வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, எனது குடும்பத்தினரும் நிற்க மாட்டார்கள் என அவர், தடாலடியாக அறிவித்தார். புதுச்சேரி அரசியலுக்கு முழுக்கு போடும் மல்லாடியின் இந்த அறிவிப்பு ஆளும் காங்கிரசுக்கு இழப்பை
ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தான் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார். தற்போது ஏனாம் எம்எல்ஏவாக பணியை தொடர்ந்து வரும் அவர், கடந்த 25 நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டிருந்தார். தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து செயலர், தலைமை செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதே நேரத்தில் புதுச்சேரி சட்டசபை அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார். வரும் தேர்தலில் மல்லாடிக்கு பதிலாக யார், ஏனாம் தொகுதி வேட்பாளராக போகிறார் என பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்தும், தனக்கு பதிலாக யாரை தொகுதியில் நிறுத்தலாம்? என தனது ஆதரவாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். சுயேட்சை எம்எல்ஏவா, அல்லது காங்கிரஸ் கட்சியிலே வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்பதெல்லாம் தற்போதைக்கு தெரியவில்லை. கடந்த தேர்தலில் மல்லாடியை எதிர்த்து என். ஆர் காங்கிரஸ் சார்பில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பைரவசாமி நிறுத்தப்பட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : candidate ,constituency ,elections ,Enam ,supporters ,Malladi ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...