×

சசிகலாவுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு அனுமதி கேட்டு அமமுகவினர் வேலூர் கலெக்டரிடம் மனு பெங்களூரில் இருந்து வரும் 8ம் தேதி சென்னைக்கு செல்லும்

வேலூர், பிப்.5: பெங்களூரில் இருந்து வரும் 8ம் தேதி சென்னைக்கு செல்லும் சசிகலாவுக்கு வேலூர் மாவட்ட எல்லையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அனுமதி வழங்குமாறு அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தார்.பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சைக்காக பெங்களூரில் தங்கியுள்ளார். சிகிச்சை முடிந்துள்ள நிலையில் வரும் 8ம் தேதி சென்னை வருகிறார். அவருக்கு தமிழக எல்லையில் இருந்து, சென்னை வரை, வழிநெடுக அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அமமுக அமைப்பு செயலாளரும், குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை கலெக்டர் சண்முக சுந்தரத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வருவதை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்ற என்ற முறையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன். அப்போது காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது. அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்தில் வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags : Chennai ,Vellore Collector ,Bangalore ,Sasikala ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்