ராதாபுரம் அம்பேத்கர் போர்டு விவகாரம் சமாதான கூட்டத்தில் இருந்து விசிகவினர் வெளிநடப்பு செய்ததால் திடீர் பரபரப்பு

விக்கிரவாண்டி, பிப். 5:  விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் கடந்த மாதம் 22ம் தேதி அம்பேத்கர் உருவ போர்டை உயர்நீதிமன்ற உத்தரவின் படி போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இது குறித்து விசிகவினரும், வர்த்தகர் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் வருவாய் துறையினர் அம்பேத்கர் போர்டு நட்டதால் எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் சங்கத்தினர், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று ஏடிஎஸ்பி தேவநாதன், தாசில்தார்கள் தமிழ்செல்வி, சுந்தர்ராஜன், டிஎஸ்பி நல்லசிவம், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அம்பேத்கர் உருவ போர்டை மக்கள் கூடும் இடமான விஏஓ அலுவலகத்தின் எதிரே வைக்கலாமா என கருத்து கேட்டனர். இதற்கு முடிவு எட்டாமல் வி.சி.க., கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் ஆர்.டி.ஓ.,விடம் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் ராதாபுரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>