×

தென்னந்தோப்புகளில் மழைநீர் தேக்கம் காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதி

ராஜபாளையம், பிப். 5: ராஜபாளையம் பகுதியில் தென்னைந்தோப்புகள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், தேங்காய்களை பறிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து தென்னை விவசாயி ஒருவர் கூறுகையில், ‘தோப்புகளில் 40 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டுவோம். தற்போது தொடர் மழையால் மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதிகளில் வந்த மழைநீர் ஆறுகள் மூலம் கண்மாய்களில் நிறைந்து, தோப்புகளில் தேங்கியுள்ளது. ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் வருவதாலும், கண்மாய்கள் நிரம்பியிருப்பதாலும் தோப்புகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால், தேங்காய்களை பறிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 8 முதல் 10 முறையாவது தேங்காய்களை பறிக்க வேண்டும்.  இல்லையெனில் மரத்தின் தன்மை பாதிக்கப்படும். தற்போது தேங்காயின் விலை குறைந்து கொண்டே வருவதால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில், தமிழக அரசு கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : rainwater harvesting ,
× RELATED மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி