×

நல்வாழ்வு முகாமுக்கு செல்லும் ஆண்டாள் கோயில் யானைக்கு கொரோனா தொற்று ‘நெகட்டிவ்’

திருவில்லிபுத்தூர், பிப். 5: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 48 நாட்கள் யானைகள் நல்வாழ்வு முகாம் நடக்கும். இதன்படி, இந்தாண்டு  யானைகள் நலவாழ்வு முகாம்  வருகிற 8ம் தேதி துவங்குகிறது. இந்த முகாமில் பல்வேறு கோயில் யானைகள், சில தனியார் யானைகள் உட்பட ஏராளமான யானைகள் பங்கேற்பது வழக்கம். தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்வது போல், முகாமில் பங்கேற்க உள்ள யானைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இதன்பேரில், முகாமில் பங்கேற்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கும் கோவிட் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவர் கார்த்திகேயன்  தலைமையில் இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, தேக்கம்பட்டி முகாமிற்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை கிளம்பத் தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்

Tags : Corona ,welfare camp ,Andal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...