லாரியில் நகராட்சி பணி என ஒட்டி மணல் திருட்டு காரியாபட்டி அருகே பரபரப்பு

காரியாபட்டி, பிப். 5: காரியாபட்டி அருகே கம்பாளி, துலுக்கன்குளம் பகுதியில் மாவட்ட கலெக்டர் கண்ணன் மற்றும் மத்திய குழுவினர் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய நேற்று வந்தனர். அப்போது அப்பகுதியில் நகராட்சி பணி என ஒட்டப்பட்டு லாரியில் மண் அள்ளப்படுவதை கண்ட கலெக்டர், இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க உத்தரவிட்டார். அதன்படி காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அதிகாரிகளை கண்டவுடன் டிரைவர், மண் அள்ளிய நபர்கள் லாரியை விட்டு விட்டு ஓடி விட்டனர். விசாரணையில் சட்டவிரோதமாக ஜேசிபி மூலம் டிப்பர் லாரியில் செம்மண் அள்ளியது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி, லாரியை பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்தனர். மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து, மண் அள்ளியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>