×

ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிக்கு பூமிபூஜை

ராஜபாளையம், பிப். 5: ராஜபாளையம் தென்காசி சாலையில் பி.ஏ.சி ராமசாமிராஜா அரசு பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை 1980ல் ராம்கோ நிறுவனம் சார்பில் பி.சி.ஆர் ராமசாமி ராஜா அரசு பொது மருத்துவமனை என அழைக்கப்படுகிறது. இம்மருத்துவமனைக்கு, ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த புறநோயாளிகள் 300க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து செல்கின்றனர். குற்றாலம், ஐயப்பன்கோவில் சீசன் நேரங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது, முதலுதவிக்கு இம்மருத்துவமனைக்கு நாடி வருகின்றனர். இந்த மருத்துவமனை தேசியச் தரச்சான்றிதழ் பெறுவதற்காக கட்டிடங்கள் கட்டுதல், மராமத்து பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், ராஜபாளையம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாபுஜி, மருத்துவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டனர். இதையடுத்து மராமத்து பணி, புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியது.
இது குறித்து மருத்துவ அதிகாரி பாபுஜி கூறுகையில், ‘அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த அரசு ஒரு கோடி ரூபாயும், அரசு ஒரு கோடி ரூபாயும் வழங்கியுள்ளனர். நவீன இயந்திரங்கள் அனைத்து சிகிச்சைகளும் சிறந்த முறையில் செய்யவும், மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமான குடிநீர் கிடைக்கவும் பணிகள் நடக்கின்றன’ என்றார். 

Tags : Rajapalayam ,government hospital ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து