×

தரமற்ற கட்டுமானப் பணியால் தண்ணீர் கசியும் குடிநீர் தொட்டி தங்கதமிழ்ச்செல்வன் ஆய்வு

சின்னமனூர், பிப். 5: சின்னமனூர் அருகே, அய்யம்பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2018-19ல் போடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.15 லட்சத்தில், ஆண்டிச்சாமி கோயில் அருகே, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், தொட்டியில் தண்ணீரை ஏற்றினர். ஒரு சில நாட்களில் தொட்டியில் கசிவு ஏற்பட்டதால், உடனே தண்ணீரை வெளியேற்றி, கடந்த 6 மாதமாக தொட்டி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், தொட்டியிலிருந்து தண்ணீரை கொண்டு செல்ல ரூ.40 லட்சத்தில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களையும் மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திமுக கிளைக்கழக செயலாளர் ஆனந்தன் கொடுத்த தகவலின்பேரில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், புதிய குடிநீர் தொட்டியையும், இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மேல்நிலைத்தொட்டி என்ற பெயரில், அதிமுகவினர் பொம்மைத் தொட்டியை கட்டியுள்ளனர். பணத்தை கொள்ளை அடிக்கவே, இந்த வேலை யை செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்ய இருக்கிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு செல்வோம்’ என்றார்.

Tags : inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...