×

ஜூலையில் புதிய அறிவிப்புகளுடன் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில்,”தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செயற்கையாக நிதிநெருக்கடியை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு முன் எப்போதும் சந்திக்காத சவால்களை அரசு எதிர்கொண்டு வருகிறது.ஒன்றிய அரசிடம் ரூ.50,900 கோடி கேட்ட நிலையில், வெறும் ரூ.1,151 கோடிதான் பேரிடர் நிவாரண நிதியாக கிடைத்தது.ஒன்றிய அரசு பேரிடர் மேலாண்மைக்கு ரூ.6,013 கோடிதான் ஒதுக்கி உள்ளது; தமிழ்நாடு அரசு ரூ.15,571 கோடி ஆகும். மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு மீண்டும் ஒருமுறை நியாயமான முறையில் வழங்காமல் நிதிக்குழு பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்திற்கு நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மிகச்சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி பகிர்வால் தமிழ்நாட்டிற்கு ரூ.3.1 லட்சம் கோடி இழப்பு. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.9600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, ” என்று கூறினார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம் !ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் – ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mu. K. Stalin ,Chennai ,Finance Minister ,Gold South Narasu ,Government of Tamil Nadu ,EU government ,Tamil Nadu ,
× RELATED இடைக்கால பட்ஜெட்: அதிமுக...