×

ஜல்ஜீவன் திட்டத்தில் பழைய குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு பணி தேனி யூனியன் கூட்டத்தில் புகார்

தேனி. பிப். 5: தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார் . .துணைத் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெங்கராஜன், ஆண்டாள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கந்தவேல், கவிதா, மாலா, நாகலட்சுமி, தனலட்சுமி, கிருஷ்ணசாமி, சங்கீதா, அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:நாகலட்சுமி: ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பிற்கு ரூ.5000 வரை கிராம ஊராட்சி யினர் வசூலிக்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டாள் ( வட்டார வளர்ச்சி அலுவலர்): குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்போது டெபாசிட் தொகை ரூ.3 ஆயிரம், தன் பங்களிப்பு தொகை ரூ.1 ஆயிரமும், ஓராண்டுக்கான குழாய் வரியாக ரூ.720 என மொத்தம் 4 ஆயிரத்து 720 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இத் தொகையை காட்டிலும் கூடுதலாக வசூலித்தாதால், அது குறித்து புகார் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணசாமி: தர்மாபுரி ஊராட்சியில் உள்ள சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என கடந்த 3 மாதமாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பூமலைகுண்டு கிராமத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.
சக்கரவர்த்தி (தலைவர்):  ஜே.ஜே.எம் திட்டத்தில் சில கிராமங்களில் பழைய குடிநீர் குழாய்ககளைக் கொண்டு இணைப்பு பணி நடக்கின்றது. இதனை ஆய்வு செய்து புதிய பைப்புகளை கொண்டு பணிகள் நடத்திட வேண்டும்.
சங்கீதா: ஊராட்சி ஒன்றியத்தில் ஜே.ஜே.எம் திட்டத்தில் ரூ.ஒரு கோடியே 62 லட்சம் அளவிற்கு பணிகளை நடத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜங்கால்பட்டி கிராமத்திற்கு மட்டும் கூடுதலான நிதியில் பணிகள் நடக்கிறது. அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து குரல் எழுப்பினார். இவருக்கு ஆதரவாக மற்றொரு கவுன்சிலர் அன்புமணியும் தரையில் அமர்ந்தார்சக்கரவர்த்தி (தலைவர்): ஜேஜே எம் குடிநீர் திட்டமானது மத்திய அரசின் திட்டம். இத்திட்டத்தின்படி பணிகளை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஊராட்சி ஒன்றியத்திற்கு எந்த பங்களிப்பும் இல்லை.

ஜங்கால்பட்டியில்நடக்கவுள்ள பணிகளுக்கான சுமார் ரூ.30 லட்சம் நிதியை தொகுதி எம்எல்ஏவான ஓ பன்னீர்செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. எம்எல்ஏ ஒதுக்கும் நிதி மூலம் நடக்கும் பணிக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சம்பந்தமில்லை என்றார். இதற்கு கவுன்சிலர் சங்கீதா இதை ஏற்றுக்கொள்ள முடியாது எம்எல்ஏ நிதி அந்த கிராமத்துக்கு மட்டும் எப்படி ஒதுக்கியிருப்பார். எம்எல்ஏவிடம் கேட்கலாம் என்றார்.
இதற்கு பதிலளித்த தலைவர் சக்கரவர்த்தி, ‘போடி தொகுதி எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய நிதிக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சம்பந்தமில்லை கவுன்சிலர் சங்கீதா அவர் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ விடம் கேட்கலாம். இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் முருகன் வலியுறுத்தலையடுத்து, தரையில் அமர்ந்திருந்த இரண்டு பெண் கவுன்சிலர்களும் எழுந்து இருக்கைக்கு சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags : meeting ,Theni Union ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...