பரமக்குடி வருகை தந்த மு.க.ஸ்டாலினை வரவேற்க ஆயிரக்கணக்கில் திரண்ட திமுகவினர்

கமுதி, பிப்.5: பரமக்குடி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமுதி திமுக மத்திய ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சண்முகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 1000 பேர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் கிழவராஜன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, கூட்டுறவு சங்க தலைவர் குருவையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை நீதிராஜன், பம்மனேந்தல் செந்தூரான், மாரிமுத்து, புதுக்கோட்டை முருகவேல்,சங்கரப்பன்பட்டி ராஜ்குமார், பேரையூர் குமார், முகமதுசுலைமான், கே.வேப்பங்குளம் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, பொங்கி அரியப்பன், அரியமங்கலம் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், முதல்நாடு மாரிமுத்து, பேரையூர் மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும்  திமுக கமுதி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 1000 பேர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் இளைஞரணி கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன் தலைமையிலும், கமுதி நகர பொறுப்பாளர் பாலமுருகன்,அபிராமம் நகர செயலாளர் முத்துஜாகிர் உசேன் ஆகியோர் தலைமையிலும் ஏராளமான வாகனங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதேபோல் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் ஏராளமானவாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் துணைச் சேர்மன் சித்ராதேவி அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் காவடிமுருகன், முத்துவிஜயன், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் காசிலிங்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராஜ், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>