திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு

பரமக்குடி, பிப்.5: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று பரமக்குடி வருகை தந்தார்.    ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், முன்னாள் மாவட்ட பதிவாளர் முனைவர் பாலு, மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் எஸ்எம்டி அருளானந்து, பரமக்குடி தெற்கு நகர செயலாளர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பாளர் சாந்தி தியேட்டர் ஜீவரத்தினம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சண்.சம்பத்குமார்,  பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நயினார்கோவில் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சக்தி, பரமக்குடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகரன், நயினார்கோவில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை, போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கேகே.கதிரவன், போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன், ஒன்றிய குழு துணை தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பூமிநாதன்,

போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர்கள் பாதாள பைரவன் தேன்மொழி, முருகேஸ்வரி,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜிகே.குமரகுரு, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய 7வது வார்டு கிளியூர் ஒன்றிய கவுன்சிலர் கவிதா குமரகுரு,   பரமக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பரமக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளரும் உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவருமான  மோகன், பீர்க்கன்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ், கலையூர் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், திமுக முதுநிலை ஒப்பந்ததாரர் ஜெயமுருகன், பாம்புவிழுந்தான் திமுக கிளைச் செயலாளர் ஆனந்தராஜா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.  

மேலும், பரமக்குடி நகர் தெற்கு பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மும்மூர்த்தி, கிங் வினோத், கலீல் ரகுமான், 28வது வட்ட பிரதிநிதி அருண்குமார், பரமக்குடி நகர் தெற்கு பொறுப்புக் குழு உறுப்பினர் மோகன், மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் குழந்தை ராஜா, பரமக்குடி நகர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப கிழக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பரமக்குடி நகர் வடக்கு பொறுப்புக் குழு உறுப்பினர் பைசல் ரஷித், பரமக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி பிரபாகரன், பரமக்குடி நகர் வடக்கு பொறுப்புக் குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More