மு.க.ஸ்டாலினுக்கு அமோக வரவேற்பு

ராமநாதபுரம், பிப்.5: பரமக்குடிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம், மண்டபம் ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதில் வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பூர்ணவேல், வெள்ளரிஓடை சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆறுமுகம் சுப்பிரமணி, தாமரைக்குளம் சுகந்தி, சோமசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெண்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் சென்றனர். இதில் சூரக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் தேவநாதன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, ஐடி பிரதீப் பழனிவேல், தொண்டரணி காளிதாஸ், திமுக பிரமுகர் டாக்டர் குமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.இதேபோல் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் புல்லாணி தலைமையில் ஏராளமான வாகனத்தில் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே மாதிரியான ஆடைகளுடன் பங்கேற்றனர்.

Related Stories:

>