×

தொண்டியில் சிவன் கோயிலின் முன் விழுந்து கிடக்கும் மரம்

தொண்டி, பிப்.5:    தொண்டியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிதம்பரேஸ்வரர்-சிவகாமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் முன்பு கடந்த பத்து நாள்களுக்கு முன் மரம் வெட்டப்பட்டது. திடீரென மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. அப்போது கோவிலின் வாசல் முன்பு மிகப்பெரிய கிளை ஒன்று விழுந்தது. இதை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மரத்தை தாண்டி கடும் சிரமப்பட்டு உள்ளே செல்கின்றனர். எனவே மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து மூர்த்தி கூறுகையில், மரம் வெட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு கோவிலின் வாசலின் முன்பு மரத்தை அப்படியே போட்டுவிட்டனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Shiva ,Tondi ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...