×

திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2026-29ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நடந்தது. தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணை தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இணை செயலாளர்களாக எஸ்.எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி, செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.அரவிந்தராஜ், என்.லிங்குசாமி, ஆர்.மாதேஷ், மனோஜ்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், சி.ரங்கநாதன், எஸ்.ரவிமரியா, சரவணன் சுப்பையா, ஏ.வெங்கடேஷ், வெங்கட் பிரபு, அசோக் அண்ணாமலை, இந்திரா கிளாரா, ஆர்.கே.கண்ணன், முத்துவடுகு, தி.ரமேஷ் பிரபாகரன், சாய் ராம்கி, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அனைத்து நிர்வாகிகளும் நேற்று சென்னையில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags : R.K. Selvamani ,Film Directors Association ,Chennai ,Tamil Nadu Film Directors Association ,P. Vasu ,K.S. Ravikumar ,R.V. Udayakumar ,Perarasu ,S. Ezhill ,Saran ,Sundar.C ,
× RELATED மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்...