மாரடைப்பால் போலீஸ்காரர் சாவு

திருமங்கலம், பிப்.5: மதுரை திருமங்கலம் அடுத்துள்ள சித்தாலையை சேர்ந்தவர் பூலோகசுந்தர்(40). தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் தற்போது போலீஸ்காராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜன.26ம் தேதி குடியரசுதினவிழா பாதுகாப்பிற்காக சென்னைக்கு பணிக்கு சென்று வந்த பூலோகசுந்தருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். போக்குவரத்து பிரிவு போலீஸ்காரரின் திடீர் மறைவு திருமங்கலம் சகபோலீசாருக்கு வேதனையை அளித்துள்ளது. இறந்த பூலோகசுந்தர் கடந்த 18 ஆண்டுகளாக போலீசாராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>