×

அமமுக அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழா

உசிலம்பட்டி, பிப்.5: அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண விழாவை டிடிவி தினகரன் நடத்தி வைத்தார்.  மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஐ-டா-ஸ்கட்டர் அரங்கில் அமமுக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ,வுமான மகேந்திரன் - ஜெயப்பிரியா இல்ல திருமண விழா நடந்தது. இத்தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், திருமங்கலம் தொழில் அதிபர் சுவை. தி. வைர செழியன் - வளர்மதி தம்பதியின் மகன் சுவை தி. ஆதித்த சிபி சக்கரவர்த்திக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக அவருக்கு கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Tags : Wedding Ceremony ,House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்