×

திருமங்கலத்தில் வைக்கோல் படப்பில் தீ

திருமங்கலம், பிப்.5: திருமங்கலம் அடுத்துள்ள தோப்பூரைச் சேர்ந்த சந்திரா பால்பாண்டி. இவரது வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் சென்று படப்பில் பற்றி எரிந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்தனர்.  இந்த விபத்தினை தொடர்ந்து நள்ளிரவில் கப்பலூர் சிட்கோவில் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்த தீயணைப்புவீரர்கள் சென்று கழிவுதீயை அணைத்தனர். 

Tags : wedding ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு...