பழநி லட்சுமி நரசிம்மர் கோயிலில் வருடாபிஷேகம்

பழநி, பிப். 5: பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி ராமநாதன் நகரில் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு நேற்று வருடாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்ள கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.  அதன்பின், யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்தக் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு 16 வகை அபிஷேகங்கள்,  சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராமநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Stories:

>