திண்டுக்கல் ஆர்டிஓ ஆபீசில் சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு

திண்டுக்கல், பிப். 5: திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆர்டிஓ சுரேஷ் தலைமை வகிக்க, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் கண்ணன், நிலைய அலுவலர் காமராஜ், வீரர்கள் வீரலட்சுமணன், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் ஓட்டுனர் உரிமம், புதுப்பிக்க வாங்க வந்தவர்களிடம் விபத்து ஏற்படும் போது அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, பேரிடர் காலங்களில் சிக்கி தவிப்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும் செயல்முறை செய்து காட்டினர்.  மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

Related Stories: