×

திண்டுக்கல்லில் கட்டி முடித்தும் திறக்கப்படாத காந்தி மார்க்கெட் சாலையோரம் கடைகள் அமைப்பதால் கடும் நெரிசல்

திண்டுக்கல், பிப். 5: திண்டுக்கல் காந்தி காய்கறி மா்க்கெட் புதுப்பிக்கும் பணி முடிந்தும் திறக்கப்படாததால் வியாபாரிகள் சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திண்டுக்கல் காந்திகிராமத்திற்கு கடந்த 1946ம் ஆண்டு வந்த காந்தியடிகள் மலைக்கோட்டை அருகே தற்போதைய காந்தி மார்க்கெட் உள்ள இடத்தில் பேசினார். அதன்பின்பே இந்த இடம் காந்தி மைதானம் என அழைக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1990ம் ஆண்டு காந்தி காய்கறி மார்க்கெட் துவக்கப்பட்டது.  அடிப்படை வசதி இல்லை300 கடைகளுடம் செயல்பட்டு வந்த இம்மார்க்கெட்டில் 30 ஆண்டுகளாகியும் எந்த வசதியும் செய்யவில்லை. சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும். அதன் நடுவேதான் காய்கறிகள் விற்பனை நடக்கும். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். சில நேரங்களில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சகதி காணப்பட்டால் வியாபாரிகள் ரோட்டில் கடைகள் அமைப்பர். அப்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை பல ஆண்டுகளாகியும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதற்கு நிரந்த தீர்வு காண கோரி பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். பின்னர் ஒருவழியாக அதை செவிசாய்த்து கடந்த ஆண்டு மார்க்கெட்டை சீரமைக்க மாநகராட்சி முன்வந்தது. தொடர்ந்து புதிய கடைகள் கட்ட, அனைத்து கடைகளையும் இடித்து பணிகளை துவக்கினர்.

தற்காலிக மார்க்கெட் இந்த புதுப்பிக்கும் பணியால் வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்க லாரி பேட்டை, அரசு தொழிற்கல்லூரியை ஒதுக்கினர். ஆனால் வியாபாரிகள் நிரந்தரமான இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டது. அங்கு வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்த நிலையில், பள்ளிகள் திறகக்கப்பட்டதால் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற கூறினர்.
நடுரோட்டில் கடைகள் இதையடுத்து வியாபாரிகள் தற்போது தாலுகா அலுவலகம் ரோட்டில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், பொதுமக்களும் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே காந்தி மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dindigul ,roadside shops ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...