திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைப்பு எஸ்பி அதிரடி

திண்டுக்கல், பிப். 5: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுகள், குளங்கள், அணைகள், தடுப்பணைகள் என ஏராளமாக உள்ளன. அணை, குளங்களில் விவசாயத்திற்காக அவ்வப்போது அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளி செல்வர். ஆனால் விவசாய பயன்பாட்டிற்கு இல்லாமல் பிற தேவைக்காக அனுமதியின்றி நீர் நிலைகளில் மணல் அள்ளி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த மணல் கடத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் நள்ளிரவிலே நடக்கின்றன. சம்பந்தப்பட்ட கிராமமக்கள் ஒன்று திரண்டு தடுத்தாலும் இச்சம்பவம் தொடர்ந்து நடந்துதான் வருகிறது. இதனால் மணல் திருட்டு குறித்து எஸ்பி அலுவலகத்திற்கு அதிகமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே மணல் கடத்தல் கும்பலை தடுக்க மாவட்டம் முழுவதும் எஸ்பி ரவளி பிரியா உத்தரவின்பேரில் 8 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு போலீஸ் படையும், எஸ்பி நேரடி கண்காணிப்பில் ஒரு தனிப்படையும் செயல்படுகின்றன. இந்த 8 தனிப்படைகள் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் இடம் பெற்றுள்ளனர். எனவே பொதுமக்கள் மணல் கடத்தல் கும்பல் குறித்து 0451-2461500 9498101520 என்ற தொலைபேசி எண்ணிற்கு போலீசாருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>