×

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு பழநியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் பேரணி

பழநி, பிப். 5: ஆயுர்வேத, சித்த, யுனானி பிரிவுகளை கொண்ட மத்திய இந்திய மருத்துவ குழுமம் கடந்த நவ.19ம் தேதி வர்த்தமானி மூலமாக ஆயுர்வேத மேற்படிப்பிற்கான ஒழுங்குமுறையை வெளியிட்டது. இதில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்ததென்றும், எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்கு பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் தொடர்பான போதிய அறிவும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை செய்து சாத்தியமில்லையென கூறி இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதன்படி கூட்டு மருத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் சார்பில் மருத்துவர்கள் பங்கேற்கும் பைக் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று உடுமலையை சேர்ந்த டாக்டர்கள் பைக் பேரணியாக பழநி வந்தனர். பழநி- புதுதாராபுரம் சாலையில் டிஎஸ்பி அலுவலகம் எதிர்புறம் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து  நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இன்று பழநியைச் சேர்ந்த டாக்டர்கள் பைக் பேரணியாக திண்டுக்கல் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்க உள்ளனர். சென்னை வரை டாக்டர்கள் குழுக்களாக பைக் பேரணி நடத்த உள்ளனர்.

Tags : rally ,Indian Medical Association ,Palani ,doctors ,
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி