நடை பாதை மீண்டும் ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா ஆத்தூரில் பரபரப்பு

சின்னாளபட்டி, பிப். 5: ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி, சங்காரெட்டிகோட்டை வடக்கு தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 2 பேர் சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதையை மறைத்தும் கட்டிடங்கள் கட்டி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்க, அவரது உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கல் ஊன்றினர். தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் அந்த கல்லை பிடுங்கி விட்டு மீண்டும் கட்டிடங்கள் கட்டியதாக கூறப்படுகிறது.

Related Stories:

>