ஒட்டன்சத்திரத்தில் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு

ஒட்டன்சத்திரம், பிப். 5:ஒட்டன்சத்திரம் 17வது வார்டு சண்முகவேல்புரத்தில் ஒருங்கிணைந்த அனைவருக்கும் பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ரூ.9.70 லட்சம, பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய அரசு பள்ளிக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. தாசில்தார் சுப்பையா திறந்து வைத்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் சகாயசெல்வி, திட்ட மேற்பார்வையாளர் சவிதா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் இமானுவேல் தேசிங்கம், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, தலைமையாசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியை சாந்தி, ஊர் தலைவர் சுப்பிரமணி மற்றும் கிராமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>