×

அடிப்படை வசதிகள் செய்யக்கோரி கீழானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கீழானூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி அக்கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கீழானூர் ஊராட்சி தலைவர் உஷா பிரேம்சேகர் தலைமையில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் கொடுத்த மனு விபரம்: திருவள்ளூர் ஒன்றியம், கீழானூர் ஊராட்சியில் உள்ள சிட்டத்தூர் காலனியில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கென மின்விசை பம்பின் மூலமாக வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியவில்லை. இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கொண்டுவர வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு விடுபட்டுள்ள 70 நாள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள நெற்களம், குளம், மயான பூமி ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.  கலெக்டர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : Keezhanoor Village Collector ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...